பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்
- IndiaGlitz, [Friday,June 15 2018]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுதலை செய்ய கடந்த பல ஆண்டுகளாக அவருடைய தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் உள்பட பல்வேறு விதங்களில் போராடி வருகிறார்.
இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து அதன் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியது. ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழக அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதன் மூலம் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த நிலையில் தனது கடைசி முயற்சியும் தோல்வி அடைந்த விரக்தியில் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது என்றுதெரியவில்லை. பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.