சென்னை உள்பட உலகின் 7 நகரங்களில் திருமணம் செய்யும் காதல் ஜோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்றாலும் ஒரு ஜோடிக்கு ஒருமுறைதான் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி உலகம் சுற்றும் ஜோடிகளாக மாறி ஏழு நகரங்களில் ஏழுமுறை திருமணம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடியான திமோத்தி மற்றும் கேப்ரில்லா ஜோடிக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் திருப்தி அடையாத இந்த ஜோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விதவிதமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதன்படி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்த ஜோடி அந்நாட்டு கலாச்சாரத்தின்படி கடந்த மே 18ஆம் தேதி திருமணம் செய்தனர்.
அடுத்ததாக இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இவர்களுடைய இரண்டாவ்து திருமணம் நெருங்கிய நண்பர் ஒருவரின் முன்னிலையில் நடந்தது.
பின்னர் மூன்றாவதாக நேபாள நாட்டில் உள்ள பேட்டன் என்ற நகரில் புத்த குருமார்களின் முன்னிலையில் ஜூன் 2ஆம் தேதி நடந்தது.
இந்த காதல் ஜோடியின் அடுத்த குறி நம்மூர் சென்னை. ஜூன் 7ஆம் தேதி சென்னையில் திமோத்தி பட்டுவேஷ்டியிலும், கேப்ரில்லா பட்டுச்சேலையிலும் ஜொலிக்க சுமார் 15 பேர் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க நான்காவதாக திருமணம் நடந்தது. சென்னையில் திருமணம் முடிந்ததும் இந்த ஜோடி மகாபலிபுரத்தில் சில் நாட்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது ஐந்தாவது முறை திருமணம் கென்யாவில் நடைபெறவுள்ளதாகவும், ஆறாவது திருமணம் அந்தரத்தில் அதாவது பராகுவேவில் பலூனில் நடைபெறவுள்ளதாகவும், கடைசியாக ஏழாவது திருமணம் ஆம்ஸ்டர்டாம் நகரில் நண்பர்களுடன் நடைபெறவுள்ளதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
ஏழு முறை திருமணம் செய்து தங்களுடைய புதுவாழ்வை தொடங்கவுள்ள இந்த காதல் ஜோடிக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments