ரூபாய் நோட்டு விவகாரம். இப்படியும் பலியாகும் உயிர்கள்
- IndiaGlitz, [Thursday,November 17 2016]
கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து பழைய செல்லாத ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்ற சென்ற பொதுமக்களில் இதுவரை 39 பேர் இறந்ததாக ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டை பெற்ற மகிழ்ச்சியில் முதியவர் ஒருவர் மாரடைப்பால் இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரையும் சேர்த்து பலி எண்ணிக்கை ரூ.40ஐ தொட்டுள்ளது. இதில் வங்கி ஊழியர், தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்
மேலும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் பலர் வெயிலில் கால்கடுக்க வங்கிகளின் முன்னும், ஏ.டி.எம். மையங்களில் முன்னும் நிற்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.