தேவாலயங்களில் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை… பகீர் அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளாக 3.30 லட்சம் சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு விசாரணை கமிஷன் பகீர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இதுபோன்ற கொடூரங்கள் அந்த நாட்டில் கடந்த 1950 களில் இருந்தே துவங்கி விட்டதாகவும் இந்தக் குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட 3,000 குற்றவாளிகள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த விசாரணையை நடத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் ஜுன் மார்க் சாவ் என்பவரின் தலைமையில் தனி கமிஷனை ஏற்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 3,000 பேர்களில் 3:2% தேவாலயங்களில் உள்ள பாதிரிமார்கள் என்றும் மீதமுள்ள ஒரு சதவீதத்தினர் மட்டுமே அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களாக இருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இத்தகைய பாலியல் தொல்லை காரணமாக அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதை பல்வேறு புகார்கள் மற்றும் ஆவணங்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

அதேபோல பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80%க்கும் மேல் ஆண் குழந்தைகளாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் தனி கமிஷன் அமைக்கப்பட்டு தேவாலயங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் அவலங்களை விசாரித்த நிலையில் தற்போது 2,500 பக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.