close
Choose your channels

விஷால்-மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர்

Friday, March 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கதகளி' படத்தை அடுத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கவிருந்த விஷால், பின்னர் திடீரென அந்த படம் கேன்சல் ஆனதால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துப்பறிவாளன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.


இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக அரோல் கரோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' மற்றும் சூர்யா நடித்த 'பசங்க 2' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மிஷ்கின் தயாரித்து நடிக்கும் 'சவரக்கத்தி' படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.

விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment