அமெரிக்காவில் ஒரு நெடுவாசல் போராட்டம்: அர்னால்ட் ஆதரவு
- IndiaGlitz, [Tuesday,January 23 2018]
சமீபத்தில் தமிழகத்தின் உள்ள நெடுவாசலில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு முயற்சித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் எழுந்தது
இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள பசுபிக் கடற்கரை பகுதியில் எண்ணெய் கிணறு தோண்ட தற்போதைய அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாண ஆளுனராக இருந்தவரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்ட் இந்த முயற்சிக்கு கடும் கண்டனத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எண்ணெய் கிணறு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டம் தான். ஆனால் அதை விட அந்த பகுதியில் வாழும் மக்களின் உணர்வு முக்கியமானது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த பகுதியின் சுற்றுலாத்துறை மற்றும் கடல் உணவுத்துறை பாதிக்கப்படும். எனவே இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மேலும் இந்த திட்டத்தால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதற்கு நல்ல காற்று கூட கிடைக்காமல் போய்விடும்' என்று கூறியுள்ளார். அர்னால்டின் இந்த எதிர்ப்பு குரலுக்கு ஆதரவு வலுத்து வருவதால் அமெரிக்க அரசு கடும் சிக்கலில் உள்ளது.