எல்லாத்துக்கும் விஜய் சேதுபதி தான் காரணமா? அர்னவ் இன்ஸ்டா போஸ்ட்டால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேறிய நிலையில், அவர் வெளியேறும் போது அவரை நக்கலாக விஜய் சேதுபதி பேசியதும், அர்னவ் பேசிய சில விஷயங்களை அவர் கண்டித்ததையும் நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் தான் பேசியதற்கான காரணமே விஜய் சேதுபதி தான் என அர்னவ் தனது இன்ஸ்டாவில் மீம்ஸ் பதிவு செய்துள்ளார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் அர்னவ் வெளியேறும் முன்பு சக போட்டியாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அர்னவ் சத்யா, விஷால், தீபக் எல்லாருமே ஜால்ரா பாய்ஸ். நான் உங்களிடம் பேசவில்லை என்பதற்காக, நீங்கள் ஒரு டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிவிட்டீர்கள் என்று கூறினார்.

அப்போது குறிப்பிட்ட விஜய் சேதுபதி, அநாகரிகமாக பேச வேண்டாம். உங்களுடைய கருத்தை மட்டும் சொல்லுங்கள், வன்மத்தை கொட்ட வேண்டாம். உங்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்த போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது பேச கூடாது. மேலும், உங்கள் எலிமினேஷனுக்கு ஆண்கள் டீம் காரணம் அல்ல. உங்களை வெளியே அனுப்பியதற்கு மக்களின் ஓட்டு மற்றும் பெண்களின் நாமினேஷன் தான் காரணம், ஆண்கள் டீம் அல்ல என்றார். போகும்போது சக போட்டியாளருக்கு அறிவுரை சொல்லிவிட்டு போங்கள், தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அர்னவ் குறித்து நெட்டிசன்கள் மீம்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் வெளியேறிய போது பேசிய அனைத்தும் விஜய் சேதுபதி தான் பேச சொன்னது, அட்வைஸ் சொல்ற மாதிரி பேச வேண்டாம், அடிச்சு பேசுங்க என்று சொன்னார் என்று குறிப்பிடும் ஒரு மீம்ஸை பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!

நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன செஞ்சாலும் தப்பு சொல்றாங்க.. செளந்தர்யாவை கதறி அழவைத்த பெண்கள் அணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா, "நான் என்ன செய்தாலும் தப்பு தான் சொல்றாங்க"

ரஷ்யாவில் வெளியாக இருக்கும் கமல்ஹாசன் திரைப்படம்.. தேதி அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ரஷ்யாவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரஷ்ய மொழியில் இதற்காக டப் செய்யப்பட்டிருப்பதாகவும்

திருமண தேதியே அறிவிக்கவில்லை.. அதற்குள் ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் தெரிந்தது.

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்: நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..!

பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.