எல்லாத்துக்கும் விஜய் சேதுபதி தான் காரணமா? அர்னவ் இன்ஸ்டா போஸ்ட்டால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேறிய நிலையில், அவர் வெளியேறும் போது அவரை நக்கலாக விஜய் சேதுபதி பேசியதும், அர்னவ் பேசிய சில விஷயங்களை அவர் கண்டித்ததையும் நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் தான் பேசியதற்கான காரணமே விஜய் சேதுபதி தான் என அர்னவ் தனது இன்ஸ்டாவில் மீம்ஸ் பதிவு செய்துள்ளார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் அர்னவ் வெளியேறும் முன்பு "சக போட்டியாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அர்னவ் "சத்யா, விஷால், தீபக் எல்லாருமே ஜால்ரா பாய்ஸ். நான் உங்களிடம் பேசவில்லை என்பதற்காக, நீங்கள் ஒரு டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிவிட்டீர்கள்" என்று கூறினார்.
அப்போது குறிப்பிட்ட விஜய் சேதுபதி, "அநாகரிகமாக பேச வேண்டாம். உங்களுடைய கருத்தை மட்டும் சொல்லுங்கள், வன்மத்தை கொட்ட வேண்டாம். உங்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்த போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது பேச கூடாது. மேலும், உங்கள் எலிமினேஷனுக்கு ஆண்கள் டீம் காரணம் அல்ல. உங்களை வெளியே அனுப்பியதற்கு மக்களின் ஓட்டு மற்றும் பெண்களின் நாமினேஷன் தான் காரணம், ஆண்கள் டீம் அல்ல" என்றார். "போகும்போது சக போட்டியாளருக்கு அறிவுரை சொல்லிவிட்டு போங்கள், தேவையில்லாமல் பேச வேண்டாம்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அர்னவ் குறித்து நெட்டிசன்கள் மீம்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் வெளியேறிய போது பேசிய அனைத்தும் விஜய் சேதுபதி தான் பேச சொன்னது, அட்வைஸ் சொல்ற மாதிரி பேச வேண்டாம், அடிச்சு பேசுங்க என்று சொன்னார் என்று குறிப்பிடும் ஒரு மீம்ஸை பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com