வைரல் ஆகும் அர்னவ் மனைவியுடன் அன்ஷிதா பேசும் போன் உரையாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்குவதற்கான இடம் குறித்த பிரச்சனை ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நேற்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நுழைந்த 18 போட்டியாளர்களில் சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் சீரியல் நடிகை அன்ஷிதா ஆகியவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அர்னவ் மனைவி திவ்யாவிடம் அன்ஷிதா ஆவேசமாக பேசிய உரையாடலின் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
"உன் புருஷனை நான் காதலிப்பேன், அவனுக்கு ஐ லவ் யூ சொல்வேன்" என்று அன்ஷிதா சொல்ல, அதற்கு அர்னவ் மனைவி திவ்யா "ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்ணே கெடுக்கலாமா? இப்படிப்பட்டவர் இருக்கும் உலகில் நான் எப்படி வாழ முடியும்?" என்று கூறியது அந்த ஆடியோவில் உள்ளது.
மேலும், திவ்யா தனது கணவர் அர்னவ் உடன் வாக்குவாதம் செய்யும் உரையாடல், உன்னை நேரில் பார்த்தால் நான் கண்டதுண்டமாக வெட்டி நாய்க்கு போடுவேன் என்று அன்ஷிதா கூறியது ஆகியவையும் அந்த ஆடியோவில் உள்ளன.
இந்த நிலையில், அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நுழைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Arnav & #Anshitha in same season !!!
— Raj M (@RajM01167669) October 6, 2024
A year back video of #Arnav & his wife issue due to #Anshitha#BiggBoss8#BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #VijaySethupathi #BiggBoss18 #biggboss8tamil #BiggBoss #Bigbosstamil pic.twitter.com/tG1V9iQmGM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments