ஹாலிவுட் படத்தில் நடித்த த்ரில் அனுபவம்… வலிமை பட நாயகி வெளியிட்ட வைரல் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை“ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இதில் “காலா“ படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற ஹுமா குரோஷி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகையான ஹுமா குரோஷி சமீபத்தில் வெளியான Army of dead எனும் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். கடந்த மே 14 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸை கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தை Zack Snyder என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும் இது ஒரு ஜுவாம்பி திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்போது நெட்பிளிக்ஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
நடிகை ஹுமா குரோஷி Army of dead படத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அகதியாக கீதா எனும் கேரக்டரில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக் காட்சி எப்படி படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் தன்னுடைய பங்கு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இத்திரைப்படத்தின் வெற்றி சீக்ரெட் என்ன என்பது குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments