ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு? கைது நடவடிக்கையா?

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

'சர்கார்' படத்தில் ஒருசில காட்சிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், தமிழக அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் காட்டியிருப்பதாகவும் கூறி நேற்று முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக புகார் ஒன்றை அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்

இதனையடுத்து நேற்றிரவு சாலிகிராமத்தில் உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீஸ் குவிந்ததால் அவர் கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை எனவும், வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'காவல் துறையினர் தனது வீட்டின் கதவை பலமுறை தட்டியாகவும், தான் தற்போது வீட்டில் இல்லை எனவும், தற்போது எந்த காவலரும் தனது வீட்டின் முன்பு இல்லை எனவும் பதிவு செய்துள்ளார்.