பெற்றோர்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸின் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் கூறப்பட்டிருப்பதாவது: 42 வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் ஆரம்பமாகிவிட்டது, பெற்றோர்களே.. குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்..புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டாக்குங்கள்.! அற்புதமான புத்தகங்கள் கிடைக்கின்றன 'என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 42-வது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 20ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் 820 அரங்குகளில் 1.5 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
42 வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் ஆரம்பமாகிவிட்டது, பெற்றோர்களே.. குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்..புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டாக்குங்கள்.! அற்புதமான புத்தகங்கள் கிடைக்கின்றன .!
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout