ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

  • IndiaGlitz, [Saturday,January 09 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் 'அகிரா' என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 'மெளனகுரு' படத்தின் இந்தி ரீமேக் படமான இந்த படத்தில் அருள்நிதி கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார்.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாகவும், இந்த அதிரடி ஆக்சன் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வந்த 'ரங்கூன்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 'ரங்கூன்' திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், சனாமக்பூல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.