ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு பகவத் கீதை டைட்டில்?

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு இருமொழிகளுக்கும் பொதுவான டைட்டிலை தேர்வு செய்ய படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'சம்பவாமி' என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறும் சம்பவாமி யுகே யுகே என்ற வரிகளில் இருந்து இந்த படத்தின் டைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'அதர்மம் தலைதூக்கும் போது நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன் என்ற பொருள் கூறும்ன் இந்த டைட்டில் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.

More News

மகாகவி பாரதிக்கு கமல்ஹாசன் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் கவிஞருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 136வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

'தனி ஒருவன்' வெற்றியை விட மகிழ்ச்சி அடைகிறேன். மோகன் ராஜா

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடித்த 'தனி ஒருவன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'துருவா'

புத்துயிர் பெறுகிறதா மருதநாயகம்? லைகா நிறுவனருடன் கமல் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து மீண்டும் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா விருது'. தமிழக அமைச்சரவை தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சரவை நேற்று முதன்முதலாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடியது

ரஜினி மகளின் முக்கிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தபோது