சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இணைத்து அருண்ராஜா காமராஜ் அமைத்த திரைக்கதை மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்ட திரைக்கதையில் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் கிளைமாக்ஸில் மிகச்சரியாக இணைத்த அருண்காமராஜூக்கு பாராட்டுக்கள். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாசின் பாராட்டுக்கு சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் முருகதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் 'கனா' குழுவினர்களுக்கு இயக்குனர் சேரன் அவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார். கனா" விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் வாய்பிளந்து பார்க்கும் கிரிக்கெட்டை மையப்படுத்தி உணரவைத்தது அருமை. இயக்குனர் முதல் படத்தில் மண்ணின் முக்கியத்துவம் பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்று சேரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
#Kanaa a well written film, loved the idea of connecting agriculture and cricket, climax speech is emotionally moving ...
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 2, 2019
fantastic team work ??@Arunrajakamaraj @Siva_Kartikeyan | #Sathyaraj sir | @aishu_dil @dineshkrishnanb
Romba nandri sir ???? https://t.co/Fpke1BCBt8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments