சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இணைத்து அருண்ராஜா காமராஜ் அமைத்த திரைக்கதை மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்ட திரைக்கதையில் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் கிளைமாக்ஸில் மிகச்சரியாக இணைத்த அருண்காமராஜூக்கு பாராட்டுக்கள். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாசின் பாராட்டுக்கு சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் முருகதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேபோல் 'கனா' குழுவினர்களுக்கு இயக்குனர் சேரன் அவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார். கனா விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் வாய்பிளந்து பார்க்கும் கிரிக்கெட்டை மையப்படுத்தி உணரவைத்தது அருமை. இயக்குனர் முதல் படத்தில் மண்ணின் முக்கியத்துவம் பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்று சேரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

More News

தமிழகத்தில் திரையிட காங்கிரஸ் கட்சி தடை கோரும் திரைப்படம்

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அந்த திரைப்படத்திற்கு தடை கோரி அரசியல் கட்சிகள் போராட்டம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

முன்னாள் பி.ஆர்.ஓவின் கருத்துக்களை நம்ப வேண்டாம்: விஜய் தரப்பு அறிக்கை

தளபதி விஜய்யின் பி.ஆர்.ஓஆக இருந்த ஒருவர் சமீபத்தில் அளித்த ஒருசில பேட்டிகளில் விஜய்யுடன் ஒருசில நடிகர்களை ஒப்பிட்டும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

பிறந்த நாளில் சிம்புவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

25 ஆண்டு திருமண வாழ்க்கை: பில்கேட்ஸ் மனைவி பெருமிதம்

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நேற்று தனது மனைவி மெலிண்டாவுடன் 25வது திருமண நாளை கொண்டாடினார்.