close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தில் விஜய் வில்லனா?

Monday, October 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஸ்பைடர்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய்யின் 62வது படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டு வருவது தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்த ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் இரண்டு ஹீரோ கதை ஒன்று இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய், மகேஷ்பாபு இருவரிடம் கூறி சம்மதம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் விஜய் ஹீரோவாகவும் மகேஷ்பாபுவை வில்லனாக நடிக்க வைக்க இருப்பதாகவும், அதேபோல் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மகேஷ்பாபுவுக்கு ஓகே என்றால் தனக்கும் ஓகே என்று விஜய் கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. எனினும் இந்த படம் உருவானால் தென்னிந்தியாவின் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment