ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தில் விஜய் வில்லனா?

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

'ஸ்பைடர்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய்யின் 62வது படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டு வருவது தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்த ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் இரண்டு ஹீரோ கதை ஒன்று இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய், மகேஷ்பாபு இருவரிடம் கூறி சம்மதம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் விஜய் ஹீரோவாகவும் மகேஷ்பாபுவை வில்லனாக நடிக்க வைக்க இருப்பதாகவும், அதேபோல் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மகேஷ்பாபுவுக்கு ஓகே என்றால் தனக்கும் ஓகே என்று விஜய் கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. எனினும் இந்த படம் உருவானால் தென்னிந்தியாவின் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

More News

நயன்தாரா படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. நயன்தாராவின் அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி .

டுவிட்டரில் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டிய கமல்

மகாத்மா காந்தி அவர்களின் 149வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மாவின் சமாதிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ரஜினி பட பாணியில் வியாபாரம் ஆகிய விஜய்சேதுபதி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வழக்கமாக பூஜை போட்ட அன்றோ அல்லது அதற்கும் முன்னரோ வியாபாரமாகி வருவது கோலிவுட் திரையுலகில் வழக்கமாகி வரும் ஒன்று

இதைவிட பெரிதாக செய்வோம்: சிவாஜி விழா குறித்து  கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளான நேற்றைய தினம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டிருந்த சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது,

ஹரஹர மகாதேவகி: அடல்ட் படத்திற்கு கிடைத்த அசத்தலான ஓப்பனிங்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த 'ஹரஹர மகாதேவகி' படம் இளைஞர்களின் படம் என்றும் அடல்ட் காமெடி படம் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது