அர்ஜூன் ரெட்டி புதிய தமிழ் ரீமேக்கின் இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Sunday,February 17 2019]

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புதிய வடிவத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மீண்டும் உருவாகவுள்ள இந்த படத்தில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சாந்து நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை கிரிசாயா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ஒரிஜினல் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பணிபுரிந்த இன்னொரு இணை இயக்குனர் சந்தீப் வங்கா இதே படத்தை இந்தியில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய தலைப்புடன் புதிய இயக்குனர் மற்றும் புதிய ஹீரோயினுடன் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.