ரஜினியின் நண்பர் அர்ஜூனா மூர்த்தியின் புதிய கட்சி அறிவிப்பு! கமலுடன் கூட்டணியா?

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவரது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். பாஜகவிலிருந்த அவர் ரஜினிக்காகவே அவரது கட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் திடீரென ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறிவிட்டார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுனா மூர்த்தி, புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அர்ஜுனா மூர்த்தி தனது கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அர்ஜூனாமூர்த்தி அவர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் ’இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அறிமுக விழா இன்று நடைபெற்றது

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமல் கட்சியின் கூட்டணியில் இணையுமா? ரஜினி ஆதரவு தருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்