தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார்.

சேலம் அருகே உள்ள சிறிய கிராமமான பெரியவடுகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று இந்தியாவின் புகழ்மிக்க ஒருவராக திகழும் மாரியப்பனுக்கு இன்று விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதால் மாரியப்பன் மட்டுமின்றி தமிழ்நாடே பெருமைப்படுகிறது.

மாரியப்பன் மட்டுமின்றி இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாக்சர் மனோஜ்குமார், தீபா மாலிக், தேவேந்திர ஜஜ்ஜாரியா மற்றும் வருண்சிங் ஆகியோர்களும் அர்ஜூனா விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

More News

ஓவியாவுக்கு வையாபுரி திடீர் ஆதரவு: பிக்பாஸ் வீட்டில் திருப்பம்

பிக்பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார் ஓவியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாருமே இல்லாததால் கடந்த சில நாட்களாக அவர் சோகமாகவே காணப்பட்டார்...

ஃபைனான்சியர் போத்ரா மீது பாரிவேந்தர் பரபரப்பு புகார்

பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

பெப்சி-தயாரிப்பாளர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் நலவாரியம்

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும் இடையே சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் காரணமாக பெப்சி தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது...

சச்சின், டிராவிடுக்கு சமமானவரா விராத்கோஹ்லி! முகமது யூசுப் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, ஐசிசி ரேங்கிங் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் தற்போது உள்ளார். இருப்பினும் சச்சின், டிராவிட் ஆகியோர்களை ஒப்பிடும் அளவுக்கு விராத் கோஹ்லி இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது யூசுப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்...

பிக்பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்! என்ன செய்ய போகிறார் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த ஒரே நபரான ஓவியா திடீரென உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளதாக சற்றுமுன் வெளிவந்துள்ள புரமோவில் தெரிகிறது...