கொரோனாவை முறியடிக்க புதிய மருந்து கண்டுபிடித்துள்ளோம்..! அர்ஜுன் சம்பத்.
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக தான் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "உலக மக்களுக்கு பெரும் அச்சமாக மாறிவரும் கொரோனா வைரஸிலிருந்து நம் நாட்டு மக்களை காப்பாற்றுவது நமது கடமையாகும். பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், பறவை காய்ச்சல் என எத்தனை விதமான காய்ச்சல் வந்திருந்தாலும் அதற்கு எதிராக நமது நிலவேம்பு கஷாயம் வீரியமாக செயல்பட்டு வந்திருக்கிறது. எந்த நோயாக இருந்தாலும் நமது பாரம்பரிய நாட்டு வைத்தியத்தில் மருத்துவம் உள்ளது.
அதை மீட்டுருவாக்கம் செய்து நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காக்க வேண்டும். ஆகவே ஆடாதொடா போன்ற பல மூலிகைகளை சேர்த்து நிலவேம்பு கசாயம் ஃபார்முலா 2.0வை உருவாக்கியுள்ளோம். இதை மக்கள் அனைவருக்கும் இந்து மக்கள் கட்சி கொண்டு சேர்க்கும். நமது பாரம்பரிய முறைப்படி வாழ்ந்தாலே எந்த நோயும் நமக்கு அண்டாது. மேற்கத்திய உலகை சேர்ந்தவர்களே நம்மை பின்பற்ற விரும்பும் போது நாமும் நமது பாரம்பரிய வைத்திய முறைகளை விட்டுவிடக் கூடாது" என கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments