சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த இன்றைய பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்றும் தனது அரசியல் வருகையை மறைமுகமாக கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சை அடுத்து கிட்டத்தட்ட தினந்தோறும் ரஜினியை பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூகநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரையுலகினர்களும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியை நேற்று விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் அவர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இந்து மக்கள் கட்சியின் தமிழக மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் மற்றும் இராம. இரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தற்கால தமிழக அரசியல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com