சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் அர்ஜூன் ரெட்டி நாயகன்

  • IndiaGlitz, [Saturday,December 23 2017]

சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகி ஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' என்ற படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் விஜய தேவரகொண்டாவும் தற்போது தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ஆம், ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் அடுத்த படத்தில் அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை 'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்ஷங்கர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

ரஜினி-தமிழருவி மணியன் சந்திப்பு: அரசியல் கட்சி அறிவிக்கும் தேதி குறித்த தகவல்

ரஜினிகாந்த் இம்மாதம் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவரை அவரது அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் சந்தித்தார்.

ஆர்.கே.நகரை விட்டு ஓட்டமெடுக்கும் பொதுமக்கள்: அரசியல்வாதிகள் பயமுறுத்தலா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில்

அஜித், விஜய், சூர்யாவை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியல் ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

போன வாரம் 'அருவி', இந்த வாரம் 'அறிவு': உறவுக்காரர்கள் பெற்ற வெற்றிகள்

கடந்த வாரம் வெளியான 'அருவி' சூப்பர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இன்று இரண்டு புதிய படங்கள் வெளியான போதிலும் 'அருவி' படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதில் இருந்தே இந்த படத்திற்கு

விக்ரமின் 'சாமி 2': மீண்டும் போலீஸ் கேரக்டரில் பிரபல நடிகை

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில்