கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அர்ஜூன் ரெட்டி ஹீரோ கொடுத்த நிதி
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக கோலிவுட் நட்சத்திரங்கள் சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சமும், கமல்ஹாசன் ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் நடிகர் சங்கத்தின் சார்பிலும் ரூ.5 லட்சம் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரலமான நடிகர் விஜய் தேவரகொண்ட ரூ.5 லட்சத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். மேலும் கேரளாவில் தற்போதுள்ள நிலவரம் குறித்து அறிந்து மிகவும் வருந்துவதாகவும், தன்னுடைய முதல் சுற்றுலா தலமான கேரளா இருந்து வருவதாகவும், கேரள மக்களை தான் சந்தித்து பேசியுள்ளதாகவும், அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் என்றும் கூறியுள்ளார்.
And now I hear Kerala is reeling under floods and situation is quite bad!
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 12, 2018
Kerala was my first holiday destination and has given me a lot of love for my work, I've met a lot of people from there who are some of the nicest people I know, I don't know how to reach out personally pic.twitter.com/pA2W3eRx3t
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com