5 மொழிகளில் அர்ஜூன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம்.. டைட்டில்& ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Sunday,January 01 2023]

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 50 கோடி வசூல் செய்தது. இதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ’கபீர் சிங்’ என்ற இந்தி படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். இந்த படம் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி சுமார் 400 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’அனிமல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உலகம் முழுவதும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.