திருமணம் செய்யாமல் 2 ஆவது குழந்தையை வரவேற்கும் பாலிவுட் நடிகர்… ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் அர்ஜுன் ராம்பால் தனது காதலி மூலம் 2 ஆவது குழந்தையை வரவேற்க இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்யாமலேயே அதுவும் இரண்டாவது குழந்தையா என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்ட நிலையில் அவருடைய காதலி பதிலடி கொடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் இரண்டாவது ஹீரோ, குணச்சத்திர நடிகர், வில்லன் என்று பன்முகங்களில் நடித்து நடிப்பிற்காக வரவேற்பை பெற்றவர் நடிகர் அர்ஜுன் ராம்பால். இவர் தனது முதல் மனைவி மெஹர் ஜெசியாவுடன் 20 வருடங்கள் வாழ்ந்த பிறகு விவாகரத்துப் பெற்றார். அந்த வகையில் மஹிகா, மைரா என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2018 முதல் கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் என்பவருடன் பழகிவந்த நிலையில் ஒரு வருடம் கழித்து 2019 ஜுலை மாதத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆரிக் என்று அக்குழந்தைக்கு பெயரிட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருப்பதாக கடந்த ஏப்ரல் முதல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் எப்போதுதான் திருமணம் செய்து கொள்வீர்கள்? திருமணம் செய்துகொள்ளாமலேயே இரண்டாவது குழந்தையா? வேற்று கலாச்சாரத்தைப் பரப்ப முயற்சிக்கிறீர்களா? என்று விமர்சித்து நடிகர் அர்ஜுன் ராம்பாலை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் அர்ஜுன் – கேப்ரியல்லா விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையான நிலையில் இதற்கு கேப்ரியல்லா பதிலடி கொடுத்துள்ளார். அதில் “அழகான ஆத்மாக்களை உலகிற்கு கொண்டு வருவதன் மூலம் இங்குள்ள மனநிலை கெட்டுப்போனது, சிறிய எண்ணம் கொண்ட பெரியவர்களால் அல்ல“ என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் – கேப்ரியல்லா ஜோடிக்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com