20 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியை பிரிந்தார் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பல், தனது மனைவியை 20 ஆண்டுகள் கழித்து பிரிய முடிவு செய்துள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும், மெஹர் ஜெசியாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அர்ஜூனுக்கும் ஹிருத்திக் ரோசனின் முன்னாள் மனைவி சூசனுக்கு இடையே நட்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அர்ஜூனுக்கு அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும், கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இருப்பினும் குழந்தைகளின் நலன் குறித்த விஷயங்களில் இருவரும் இணைந்தே முடிவெடுக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

More News

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு: சீல் வைத்தார் கலெக்டர்

தூத்துகுடி மக்களின் நெடுநாளைய போராட்டம் வெற்றி காணும் வகையில் இன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில்?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

'காலா' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது.

தமிழகத்திற்கும் பரவிவிட்டதா நிபா வைரஸ்? மருத்துவர்கள் விளக்கம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். வெளவால்கள் மூலம் பரவி வரும் இந்த கொடுமையான நோய், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரவிவிட்டதாக அச்சம் தரும்

மீண்டும் ஆர்.கே.நகர் பரபரப்பாகுவது எப்போது?

அரசியல் நையாண்டி படங்கள்  எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில்  பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன.