'இரும்புத்திரை'யில் ஆக்சன் கிங் அர்ஜூன் கேரக்டர்

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஷால் மேஜர் கதிரவன் கேரக்டரிலும், சைக்காலஜி டாக்டர் ரதிதேவி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜூன், 'ஒயிட் டெவில்' என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெறவுள்ளது. இன்று வெளியாகும் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொலைகார குப்பத்தை பார்வையிட வேலைக்காரன் படக்குழுவினர் சிறப்பு ஏற்பாடு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரிய ஸ்டார்களின் படத்திற்கு இணையான ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது

பிறந்த நாள் அன்று 'வேலைக்காரன்' படம் பார்த்த 92 வயது அரசியல்வாதி

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, எளிமைக்கு உதாரணமானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.

ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி: நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி

நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நேற்று விபத்தில் ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுர வீரன்' வீடியோ பாடலை வெளியிட்ட பிரபல வீராங்கனை

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

பெரியபாண்டியை சுட்டது முனிசேகர்தான்: தமிழக காவல்துறை விளக்கம்

சென்னையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறையின் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது.