ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

ஆக்சன்கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நிபுணன்' படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த படம் சென்னையில் கடந்த வாரம் 15 திரையரங்குகளில் 142 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,19,108 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

இதேபோல் அசோக்செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான 'கூட்ட்த்தில் ஒருவன்' திரைப்படமும் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளது. இந்த படம் சென்னையில் கடந்த வாரம் 12 திரையரங்குகளில் 78 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,92,607 வசூல் செய்துள்ளது.