கடலுக்கு நடுவே சைக்கிளிங் செய்யும் நட்சத்திர காதல் ஜோடி… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் அவரது காதலி மலைக்கா அரோரா இருவரும் மாலத்தீவில் தங்களது விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் பகிர்ந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாருக்கான் நடித்த “Dil se“ (உயிரே) படத்தில் “தக்கத்தய்யா“ பாடலுக்கு ரயிலின் மேல் நின்று நடனம் ஆடியவர்தான் மலைக்கா அரோரா. இந்தப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். அதையடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அர்ஹான் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அர்பாஸ் கானை பிரிந்த நடிகை மலைக்காக அரோரா தன்னைவிட 11 வயது இளையவரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இவர் போனி கபூரின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரசிகர்களிடன் வரவேற்பை பெற்ற இந்த ஜோடி தற்போது பல சுற்றுலா தளங்களுக்கு ஒன்றாகச் சென்று வருகின்றனர்.
மேலும் சோஷியல் மீடியாவில் இவர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் ரசிகர்களிடையே படு வைரலாகி வருகிறது. தற்போது மாலத்தீவு சென்றுள்ள இந்தக் காதல் ஜோடி நீச்சல் குளத்திற்குள் இருந்தவாறு சைக்கிளிங் செய்திருக்கின்றனர். இதுகுறித்து வீடியோ பதிவிட்ட அர்ஜுன் கபூர் பயிற்சியாளரை விட எனது காதலி கடுமையாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments