வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகன், மகளுக்கு கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Thursday,December 30 2021]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை“ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மற்றும் அவரது மகள் அன்ஷுலா கபூருக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக தயாரிப்பாளர் போனி கபூர் குடும்பத்தினருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் போனி கபூர் மற்றும் அவருடைய சகோதரர் அனில் கபூருக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் போனி கபூர்-மோஹா ஷோரிக் தம்பதிகளின் மகனும் பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் அருடைய மகள் அன்ஷுலா கபூருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகள் ரியா கபூர் மற்றும் அவரது கணவர் கரண் பூலானிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதையடுத்து அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பாலிவுட் நடிகைகள் கரினா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து கபூர் குடும்பத்தில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.