'விடாமுயற்சி' படப்பிடிப்பை உறுதி செய்த அர்ஜுன்.. ரிலீஸ் தேதியும் இதுதான்..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்ததால் விரைவில் இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த படம் குறித்த பல்வேறு வதந்திகள் வெளியாகின என்பதும் இந்த படம் ட்ராப் என்றும் ’குட் பேட் அக்லி’ படத்தை முடித்தவுடன் தான் அஜித் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அனைத்து வதந்திகளையும் அடித்து நொறுக்கும் வகையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். இதன்படி இந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 20 முதல் 30 சதவீதம் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளதாகவும் தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பதை அடுத்து இந்த அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.