பிரமாண்டமாக நடந்தது அர்ஜுன் மகள் திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Tuesday,June 11 2024]

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று அதாவது ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள கெருகம்பாக்கம் ஶ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக ஜூன் 7 ஆம் தேதி ஹல்தி விழாவுடன் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், ஜூன் 8 ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. திருமண விழா ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இதில் இரு வீட்டார் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஜூன் 14ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.