சண்டையில சாவறதுதான் வீரம்ன்னு சொல்லி கொடுத்துருக்காங்க.. அர்ஜுன் தாஸ் நடித்த 'ரசவாதம்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

அர்ஜுன் தாஸ் நடித்த ‘ரசவாதம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’அநீதி’ உட்பட சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள திரைப்படம் ’ரசவாதி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சற்று முன் விலையாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

’மகாமுனி’ மற்றும் ’மௌனகுரு’ ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சுஜித் சங்கர், ஜி எம் குமார், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், அருள் ஜோதி, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்

இந்த படத்தின் டிரைலர் இறுதியில் ’பயமில்லாமல் நடிக்கிறது எப்படி என்று உங்க வீட்டில் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களா? எங்க வீட்ல சண்டையில சாவறதுதான் வீரம்ன்னு சொல்லி கொடுத்துருக்காங்க, பார்த்திடலாம் வாடா’ என்று போலீஸ்காரரை சவாலுடன் அர்ஜுன் தாஸ் அழைக்கும் காட்சி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது

ஏற்கனவே அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’அநீதி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.