விஜய் நடிப்பு குறித்து பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை: அர்ஜூன் தாஸ்
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
விஜய் நடித்த மாஸ்டர் பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: விஜய் நடித்த முந்தைய படங்களின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ள பாஸ் கிடைக்குமா என வெட்கம் விட்டு அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று பாஸ் கிடைக்குமா என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த ஒரு வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவருக்கும் அனிருத் பணிபுரியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் எனக்கும் அந்த ஆசை இருந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இந்த படத்தின் பாடல்களை நான் ஏற்கனவே கேட்டிருக்கின்றேன். அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
ஒரே படத்தில் விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரிடமும் பணிபுரிந்தது என்பது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுகிரேன். நான் விஜய் சேதுபதி அவர்களிடம் படப்பிடிப்பின்போது நான் நிறைய சந்தேகங்கள் கேட்பேன். அவர் பொறுமையாக எனக்கு பதில் அளிப்பார்
விஜய் அவர்களின் நடிப்பு குறித்து பேசுவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. அவருடைய மனித நேயம் குறித்து நான் சிலவற்றை கூறலாம் என்று நினைக்கின்றேன். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருடைய புன்சிரிப்பே ஒரு குழந்தை போல் இருக்கும். அவனுடைய மனம் குழந்தைத்தனமானது தான். அவருடன் நான் பணிபுரிவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக கருதுகிறேன்
அவருடன் உட்கார்ந்து படப்பிடிப்பின்போது நிறைய பேசி உள்ளேன். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் நான் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அந்த ஒரு தருணம் எனது மனதில் மிக ஆழமாக உள்ளது. அதை நான் அவ்வப்போது மனதில் நினைத்து மகிழ்ந்து கொள்வதற்காகத்தான் நான் அந்த புகைப்படத்தை எடுக்கவில்லை. இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்