close
Choose your channels

அர்ஜுன் தாஸ் காட்டில் மழை.. ஹீரோவாக இன்னொரு படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் ’அநீதி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் கேரக்டரில் அவர் நடித்திருந்த நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் ’மௌனகுரு’ ’மகாமுனி’ போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ‘ரசவாதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கும் இன்னொரு திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகி சிவாத்மிகா ராஜஸ்ரீ நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதை அடுத்து அவரது காட்டில் மழை என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment