அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படத்தில் அன்பு என்ற கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ் அதன் பின்னர் ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ’ரசவாதி’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அந்த படத்திற்கு ’பாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இது குறித்த மோஷன் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் நடித்துள்ள இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார், டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.