அஜித்தின் பல படங்களில் பணி புரிந்துள்ளேன்.. அர்ஜுன் தாஸ் கூறிய ஆச்சரிய தகவல்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய நடித்து வரும் நிலையில், ஏற்கனவே அஜித் நடித்த பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். "வீரம்" படத்தின் டீசரை ஆன்லைனில் வெளியிட்டது நான்தான் என்று தனது சமூக வலைத்தளத்தில் அர்ஜுன் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் "குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதுகுறித்து அர்ஜுன் தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: "நடிப்பு எனும் கனவை நனைவாக்குவதற்காக சென்னை வந்தபோது எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. அப்போது சுரேஷ் சந்திரா என்னை அவருடைய அலுவலகத்தில் இணைத்துக் கொண்டார். அது இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் சந்தித்து வாய்ப்பு பெற எனக்கு ஒரு நெருங்கிய வழியாக இருந்தது.
"நம்பினால் நம்புங்கள், ’வீரம்’ படத்தின் டீசரை நான் தான் ஆன்லைனில் வெளியிட்டேன். அவர் எனக்கு எவ்வித உதவியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் எனக்காக எதையாவது செய்வார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு என்னை அழைத்து விரைவில் நாம் இருவரும் ஒரே படத்தில் இணைந்து வேலை செய்வோம் என்று கூறியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இறுதியாக அது இப்போது நடந்தே விட்டது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடன் திரையை பகிர்ந்து கொள்ள போகிறேன். இது ஒரு கனவு நினைவான தருணம்.
அவரது அலுவலகத்தில் வேலை செய்வதில் இருந்து அவருடன் திரைப்படத்தில் நடிப்பது வரை வாழ்க்கை முழுவதுமாக வந்துவிட்டது போல் உடைய உணர்கிறேன். அஜித் அவர்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்களது எதிர்பார்ப்புக்கேற்ப நான் நிச்சயம் சாதிப்பேன் என்று நம்புகிறேன்.
இந்த தருணம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும், இந்த தருணத்தை எப்போதும் நான் நினைவில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சி வருவேன், அஜித் அவர்களுடன் எப்போது படம் நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இதுதான் எனது பதில் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி. நான் என்னை முழுவதுமாக இந்த படத்தில் அர்ப்பணிப்பேன்.
ஆதிக் அண்ணா என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும் என்று அர்ஜுன் தாஸ் பதிவு செய்துள்ளார்.
#GoodBadUgly 🔥💥#Ajith Sir @SureshChandraa @Adhikravi @MythriOfficial @DoneChannel1 #ForeverGrateful pic.twitter.com/9KYtoQRUzk
— Arjun Das (@iam_arjundas) October 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments