அஜித்தின் பல படங்களில் பணி புரிந்துள்ளேன்.. அர்ஜுன் தாஸ் கூறிய ஆச்சரிய தகவல்...!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய நடித்து வரும் நிலையில், ஏற்கனவே அஜித் நடித்த பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். வீரம் படத்தின் டீசரை ஆன்லைனில் வெளியிட்டது நான்தான் என்று தனது சமூக வலைத்தளத்தில் அர்ஜுன் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதுகுறித்து அர்ஜுன் தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நடிப்பு எனும் கனவை நனைவாக்குவதற்காக சென்னை வந்தபோது எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. அப்போது சுரேஷ் சந்திரா என்னை அவருடைய அலுவலகத்தில் இணைத்துக் கொண்டார். அது இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் சந்தித்து வாய்ப்பு பெற எனக்கு ஒரு நெருங்கிய வழியாக இருந்தது.

நம்பினால் நம்புங்கள், ’வீரம்’ படத்தின் டீசரை நான் தான் ஆன்லைனில் வெளியிட்டேன். அவர் எனக்கு எவ்வித உதவியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் எனக்காக எதையாவது செய்வார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு என்னை அழைத்து விரைவில் நாம் இருவரும் ஒரே படத்தில் இணைந்து வேலை செய்வோம் என்று கூறியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இறுதியாக அது இப்போது நடந்தே விட்டது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடன் திரையை பகிர்ந்து கொள்ள போகிறேன். இது ஒரு கனவு நினைவான தருணம்.

அவரது அலுவலகத்தில் வேலை செய்வதில் இருந்து அவருடன் திரைப்படத்தில் நடிப்பது வரை வாழ்க்கை முழுவதுமாக வந்துவிட்டது போல் உடைய உணர்கிறேன். அஜித் அவர்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்களது எதிர்பார்ப்புக்கேற்ப நான் நிச்சயம் சாதிப்பேன் என்று நம்புகிறேன்.

இந்த தருணம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும், இந்த தருணத்தை எப்போதும் நான் நினைவில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சி வருவேன், அஜித் அவர்களுடன் எப்போது படம் நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இதுதான் எனது பதில் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி. நான் என்னை முழுவதுமாக இந்த படத்தில் அர்ப்பணிப்பேன்.

ஆதிக் அண்ணா என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும் என்று அர்ஜுன் தாஸ் பதிவு செய்துள்ளார்.

More News

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 5 நாள் தொடர் விடுமுறை..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'தக்லைஃப்' என்ற படத்தில் நடித்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

'அரண்மனை 5' போஸ்டர் வைரல்.. குஷ்பு கொடுத்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.

5 பெண் போட்டியாளர்களில் நாமினேஷனில் இருந்து தப்பியது யார்? ஆழ்ந்த ஆலோசனை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாமினேஷனில் உள்ள பெண்களில் ஒருவரை காப்பாற்றுமாறு

உலகமே உற்று நோக்கும் வகையில் வெற்றியை கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறவிருக்கும் நிலையில் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நூல் விட்டே நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெற்ற பெண்கள் அணி.. வழக்கம் போல் சொதப்பிய ஆண்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று 19வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது