'லவ் டுடே' படத்திற்கு பின் இன்னொரு விஜய் பட டைட்டில்.. அதிதி ஷங்கர் நாயகி.. டீசர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'லவ் டுடே’ என்ற படத்தின் டைட்டிலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது விஜய் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து இருக்கும் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகி வந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஒன்ஸ்மோர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன், விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலும் ’ஒன்ஸ்மோர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டீசரை வெளியிட்ட அர்ஜுன் தாஸ் ’ரசவாதம்’ படத்தை தியேட்டரில் பார்க்க நான் தியேட்டருக்கு வந்திருந்த போது என்னை சந்தித்த பொதுமக்கள், ஒரு நல்ல ரொமான்ஸ் படத்தில் நடியுங்கள், ரத்தம் வெட்டு குத்து எல்லாம் வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். அந்த வகையில் தற்போது நான் நடித்துள்ள ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி தான் ’ஒன்ஸ்மோர்’ என்று குறிப்பிட்டுள்ளார்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ’குட் நைட்’ ’லவ்வர்’ ஆகிய படங்களை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
My grandmother, aunt, sisters, relatives and an elderly woman I met at the theater during Rasavathi said "Do one feel-good romantic film. Ratham, vettu kutthu venaam". So for all of you, especially the paati that blessed me - this one is for all of you! Hope you all like it. Will… pic.twitter.com/rGUjPZ0Ylh
— Arjun Das (@iam_arjundas) October 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com