close
Choose your channels

முடிவுக்கு வந்தது அர்ஜூனின் அடுத்த படம்

Friday, December 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் 2018ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. இதனையடுத்து அவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் 'கொலைகாரன்' என்ற படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற அர்ஜூனின் வழியனுப்பு விழா பார்ட்டியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விஜய் ஆண்டனி அர்ஜூனுக்கும், அர்ஜூன் விஜய் ஆண்டனிக்கும் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்

விஜய் ஆண்டனி, அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'கொலைகாரன்' படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தியா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment