close
Choose your channels

காவேரி மருத்துவமனைக்கு நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு வருகை

Tuesday, August 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலையில் நேற்று மாலை சிறிது பின்னடைவு ஏற்பட்டது. இன்னும் அவருடைய உடல்நிலை பின்னடைவாக இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதியை சந்திக்க சற்றுமுன் நகைச்சுவை நடிகர் வடிவேலு காவேரி மருத்துவமனைக்கு வருகை வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு, திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில மணி நேரங்களுக்கு முன் ஆக்சிங் கிங் அர்ஜூன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment