அர்ஜெய்- லிங்கா கூட்டணியில் உருவாகும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி

  • IndiaGlitz, [Friday,August 09 2024]

தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜெய் - லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். முன்னதாக தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி - 2, எமன், அன்பறிவு, தேள், போன்ற படங்களில் மிரட்டிய அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

அதுபோல் சேதுபதி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் மிரட்டிய லிங்கா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய் மற்றும் லிங்கா கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பணிகளை அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் மேற்கொள்கிறார்.எப்.ஐ.ஆர், இன்ஸ்பெக்டர் ரிஷி, படத்தின் புகழ் அஸ்வத் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பிரேண்டன் ஷசாந்த்.

கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் ஜெயக்குமார், சரத் ரவி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

More News

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு.. இதுதான் காரணம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூரியிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்.. கதை கேட்டவுடன் சூரி பதில் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும் அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை

விஜய்சேதுபதியை உதைத்தால் பரிசு.. அறிவித்த அரசியல்வாதிக்கு நீதிமன்றம் தண்டனை..!

விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவேன் என அரசியல்வாதி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இது குறித்த வழக்கில் நீதிமன்றம்

தினமும் 21 மணி நேரம் நடிக்கிறார்.. 20 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் இது நடக்குது: அஜித் மேனேஜர்..!

நடிகர் அஜித் கடந்த பல ஆண்டுகளாக ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆவார் என்றும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால் குழப்பம் ஆகிவிடும்

தளபதி விஜய்யின் 'கோட்' .. வட இந்திய ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஒரு பக்கம்