இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன்சிங் காலமானார்

  • IndiaGlitz, [Sunday,September 17 2017]

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய விமானப்படையில் 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதியுமான அர்ஜன் சிங் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 98

முன்னதாக நேற்று அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாரத பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதே மாரடைப்பு காரணமாக காலமானார்.

கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது 44 வயதே ஆன அர்ஜன்சிங், இந்திய விமானப்படைக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தி வெற்றிக்கு வித்திட்டவர். எனவே இவர் இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் என்றும் அழைக்கப்பட்டார்

அர்ஜன் சிங் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் 5 ஸ்டார் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றார். இந்திய விமானப்படையில் ஃபீல்டு மார்ஷலுக்கு நிகரான அந்த பதவியை வகித்த ஒரே நபர் என்ற பெருமையும் அவருக்கு உரியதே.

அர்ஜன்சிங் மறைவிற்கு அரசியல் தலைவர்களும் ராணுவ உயர்திகாரிகளும் தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

More News

தமிழ்ராக்கர்ஸ்-தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே ஆன்லைன் பைரஸியை ஒழிக்க அவர் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை அனைவரும் அறிந்ததே.

திராவிட கட்சிகளை அகற்ற ரஜினி-கமல் இணையவேண்டும்: தமிழருவி மணியன்

சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினிகாந்த் விரும்பினால் தனது அணியில் இணைத்து கொள்ள தயார் என்று பேசினார்.

இன்று தமிழ் இனம் நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் தமிழ் இனத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக நீதியை காத்த தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்

விஷாலின் துப்பறிவாளன்: முதல் இரண்டு நாள் வசூல் விபரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழன் அன்று வெளியானது

சாரண, சாரணியர் இயக்க தேர்தல்: எச்.ராஜா தோல்வி

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பி.மணியும் போட்டியிட்டனர்.