நாசாவிடம் இருந்து “சாதனை பட்டம்” வாங்கிய அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் விண்வெளியில் சுற்றித்திரியும் விண்கற்களை அடையாளம் கண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். கூடவே அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பையும் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் செயல்பட்டு வரும் சிக்குரு கொலாப் நிறுவனம், விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்களை தினம்தோறும் ஆப்பிள் டெலஸ்கோப் வாயிலாக படமெடுத்து நாசா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த புகைப்படங்களை நாசா நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்வதற்கு முன்பு டி.ஏ.எப்.இ மற்றும் பென்சீர் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி உண்மைத்தன்மையை அறிந்து கொள்கிறது.
அந்த வகையில் பெங்களூர் கொலாப் நிறுவனத்திடம் பயிற்சி எடுத்துக்கொண்ட அரியலூர் அரசு பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் தற்போது விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 40 விண்கற்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்து ஆய்வறிக்கையை சமர்பித்து உள்ளனர்.
இதை சரிப்பார்த்த நாசா நிறுவனம் உண்மையில் அது விண்கற்கள்தான் என்பதை அறிந்து அரியலூர் மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண் ஆசிரியர் இருவருக்கும் சாதனை சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பையும் அவர்களுக்கே வழங்கியுள்ளது.
இதனால் நாசாவிடம் இருந்து சான்றிதழை பெற்ற அரசு பள்ளி ஆசிர்களுக்கு கல்வியாளர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout