மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு, கேரள அரசு, தன்னார்வல அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூரை சேர்ந்த ஹேமா என்ற மாணவிக்கு நீட் தேர்வுக்கான மையம் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
வறுமையின் பிடியில் இருக்கும் ஹேமாவின் குடும்பத்தினர் உடனடியாக எர்ணாகுளம் செல்வதற்கான பயணத்தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் ஹேமாவின் தாய் கவிதா, தன்னிடம் இருந்த ஒரே தங்க பொருளான கம்மலை அடகு வைத்து ஹேமாவின் பயண செலவிற்கு பணம் கொடுத்துள்ளார்.
டாக்டராக வேண்டும் என்ற மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அந்த தாய் செய்த தியாகத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் மொழி தெரியாத மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் தனது மகள் பத்திரமாக தேர்வு எழுதி முடித்து வீடு திரும்ப வேண்டும் என்று அந்த தாய் இறைவனை வேண்டி வருகிறார். ஹேமா போன்ற மாணவ, மாணவிகளுக்காக இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout