இவங்க வேறலேவல்… நடந்தே அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டர்!

  • IndiaGlitz, [Monday,December 13 2021]

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் அனைவரும் வாகனங்களைத் தவிர்த்து மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மிதிவண்டியை விட நடந்தே அலுவலகத்திற்கு வருவது இன்னும் கூடுதல் சிறப்பு எனக் காட்டியிருக்கிறார் அரியலூர் பெண் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.

முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட அட்சியர் ரமண சரஸ்வதி இன்று தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் இன்று மதியம் மற்றும் மாலை வேளையிலும் கூட அவர் நடந்தே செல்வார் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. மேலும் வாரத்தில் ஒரு நாள் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் ரமண சரஸ்வதி திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மிதிவண்டியில் தனது அலுவலகத்திற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒமைக்ரான் வைரஸ் தோற்றத்திற்கு எச்ஐவி காரணமா? பகீர் தகவல்!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் தற்போது ஒமைக்ரான்

முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி: பாவனியால் மீண்டும் ஒரு பிரச்சனை!

பாவனி விஷயம் குறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என சிபியிடம் சஞ்சீவ் வாக்குவாதம் செய்ய முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் காட்சிகள்

மோகன்லாலின் 'மரைக்காயர்': இவ்வளவு சீக்கிரம் டிஜிட்டல் ரிலீஸா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் 'மரைக்கார்' என்பதும் இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,

ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் இதுவா?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்