2 படங்கள் முடித்தும் வெளியாகாமல் இருக்கும் சோகம்.. ஷங்கர் உதவியாளருக்கே இந்த நிலையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட நிலையில் அவரிடம் உதவியாளராக இருந்த இன்னொரு இயக்குனர் இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ள நிலையில், இரண்டு படங்களும் வெளியாகாமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களில் ஒருவர் அறிவழகன். இவர் ’ஈரம் ’என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு ’வல்லினம்’ ’ஆறாது சினம்’ ’குற்றம் 23’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் ’சப்தம்’ என்ற படத்தை அவர் இயக்கி முடித்துள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் அந்த படம் வெளியாகவில்லை. அதேபோல் அருண் விஜய் நடித்த ’பார்டர்’ என்ற திரைப்படத்தையும் அறிவழகன் இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படமும் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தனது படங்கள் வெளியாகாதது குறித்து வருத்தத்துடன் அறிவழகன் தனது சமூக வலைதளத்தில் ’பார்டர்’ படத்திற்கான திரைக்கதையை 2018ல் முடித்து 2021 இல் ரிலீசுக்கு தயாரானது. அதன் பிறகு ஏராளமான ஸ்பை திரைப்படங்கள் வந்துவிட்ட நிலையில் ’பார்டர்’ இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு கடினமான உண்மை. ’பார்டர்’ திரைப்படம் நேர்மையான முயற்சியுடன் ஒரு தனித்துவமான படம். இந்த படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளேன்’ என்று ஏக்கத்துடன் பதிவு செய்திருந்தார். ஆனால் என்ன நினைத்தாரா தெரியவில்லை, அந்த பதிவை சில நிமிடங்களில் அவர் நீக்கி விட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout