குற்றப்பரம்பரை கதையை படிக்கும் பிரபல இயக்குனர்: பாலா பாரதிராஜாவுக்கு போட்டியா?

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படமாக இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை கதையை இயக்க இருப்பதாக கூறியதால் இருவருக்கும் சில மோதல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போதைய தகவலின்படி இயக்குநர் பாரதிராஜா, குற்றப்பரம்பரை படத்தை தொலைக்காட்சி சீரியலாக எடுக்கவிருப்பதாகவும் இது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’ஈரம்’ உள்பட ஒருசில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் தற்போது ’குற்றப்பரம்பரை’ நாவலை படித்துக் கொண்டிருப்பதாகவும் இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் படிப்பதற்கு சரியான நாவல் இதுதான் என்றும், பல படங்கள் இயக்கிய அனுபவத்தை விட ஒரு நல்ல நாவல் படிப்பதால் கிடைக்கும் அனுபவம் மிகச்சிறந்தது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

குற்றப்பரம்பரை கதையை படித்து முடித்தவுடன் அவர் இந்த கதையை படமாக்க முயற்சிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தற்போது அருண் விஜய் நடிக்கும் 31 வது படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்க உள்ளார் என்பதும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இதுவே ரொம்ப லேட்: பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தல அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பில்லா' படத்தின் ரீமேக் படமான 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய இரண்டு அஜித் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்பது தெரிந்ததே.

பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா: ஏரியாவையே மடக்கிய காவல்துறை

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வசித்த பகுதி மற்றும் அவர் பீட்சா டெலிவரி செய்த பகுதி முழுவதையும்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபே கலந்துகொண்ட திருமணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் நிலோபர் கஃபே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார்.

இந்தியாவுக்கு 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை  அனுப்பி வைத்துள்ளது சீனா!!!

கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப்போராட 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை சீனா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக ரூ.9.4 லட்சம் நிதி திரட்டிய சிறுமி!!!

ஹைத்ராபாத் அடுத்த இந்தூரில் ஊரடங்கு உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.